Untitled Document
335 | | பச்சிலையும் கனியும் - நிறைந்து படர்ந்து வளர் ஆலின் உச்சியிற் சென்றிருந்தால் - எப்படியான் உன்னையும் கண்டிடுவேன்? |
336 | | நாடும்என் உள்ளத்திலே - குடிபுகும் நாயகி கையமர்ந்து, பாடி அமுதளிக்கும் - அழகிய பைங்கிளி நீயலவோ? |
337 | | பூனைகள் இங்குவாரா - வேடர்தம் பொறியின் பயமும் இல்லை; யானுனைக் காத்திடுவேன் - இறங்கிநீ என்கையில் வந்திடாயோ? |
338 | | வட்டமா யுன்கழுத்தில் - ஒருநாளும் வாடாத ஆரமதை இட்டவர் ஆரடியோ? - எனக்கும் இயம்புவையோ? கிளியோ! |
339 | | மாணிக்க மூக்கழகும் - மரகத வர்ண வடிவழகும் காணக்கண் ணாயிரந்தான் - இருப்பினும் கண்டு முடிந்திடுமோ? |
340 | | கத்திரி போலவெட்டிக் - கனியினைக் கௌவி யெடுத்தோடச் சித்திர வாயளித்த - கடவுள் திருவருள் சற்றோ, அம்மா! |
341 | | சாய்ந்து தலைவணங்கி - இனிய தமிழைநீ கற்குமுறை, ஆய்ந்த புலவருமே - எழுதி அயர்ந்துகை சோர்வார், அம்மா! |
342 | | பறக்கச் சிறகிருந்தும் - மரக்கினை பற்றிநீ ஏறுவதேன்? திறத்தை உலகினுக்கு - மிகவும் தெரிவிக்கவோ? கிளியே! | |
|
|