பக்கம் எண் :

530கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1223 வஞ்சி - கோவிலில் காணிக்கை செலுத்தும் உண்டியல் பெட்டி
வஞ்சியை முறித்தல் -       உண்டிப்பெட்டியை உடைத்தல்;
திருட்டுத் தொழில் வல்லவனை, ‘வஞ்சியை முறித்த கள்வன்’
என்பது மரபு.
1225 கிராஸ் - குறுக்கு விசாரணை Cross
1229 அண்டப் புரட்டனை - உலகத்தையே புரட்டி எடுக்கும் வக்கீல்
1235 தக்கில் - தாழ்ந்த குரலில்
1254 குண்டில் - குழியில்
1257 ஈரங்கி - வழக்கு வேட்கை Hearing
1260 ஏழரை நாட்டான் Eardley Norton என்னும் பிரசித்தி பெற்ற
ஆங்கிலேயே வழக்குரைஞர்.      பாமரமக்கள் இப்பெயரை
உச்சரிக்கும்போது ஏழரை நாட்டான் என்பர்.நாஞ்சில் நாட்டில், நாட்டான் என்னும் பட்டப்     பெயருள்ளவர்கள் இருந்தனர்.
இவர்கள் எதற்கும் விவாதம்செய்பவர்கள்.
1265 வரிக்கல் - நீளமாக அடித்துத் திருத்திய கல்
1269 வருக்கை - பலா பழவகை
1270 பெட்டிப்பால் Milk Powder; பெட்டியில் இருக்கும் பால்பொடி
பிஸ்கூத் Biscuit
1277 வாசறை மீண்டான்-வாரிசிறை மீண்டான் என்றும் நெல்வகை;
நாஞ்சில்      நாட்டுத் தளபதி ஒருவனை நெல்லைச் சீமை
படைத்தலைவன்      சிறைஎடுத்துச் சென்ற போதுநாஞ்சில்
நாட்டுமக்கள்       பெரும் அளவு நெல் கொடுத்து அந்தத்
தளபதியை மீட்டார்களாம்.      பின் அந்த நெல்வாரிசிறை
மீண்டான் என்று பெயர்பெற்றது       என்பது வாய்மொழி
வழக்காறு.
1278 சம்பா - ஒரு வகை நெல்
1280 விலங்கினம் - ஆடுமாடு பன்றி போன்றவை
1291 முக்குளி - நீரில் மூழ்கும் செயல்
1294 முழுக்காளி - முத்துக்குளிப்பவன்
1320 அத்தாரிட்டிகள் - அத்தாட்சி, ஆதாரம் authorities
1328 பதிவுசாட்சி - பணம் வாங்கிக் கொண்டு முன்பின் தெரியாத
எந்தப்பத்திரத்திலும் சாட்சிக் கையெழுத்து போடவும், சாட்சி
சொல்லவும் தயாராய் இருப்பவன்.
பலவேசம் பிள்ளை - பலவேசம் என்பதைச் பலவேடம் தாங்கிய
பிள்ளைஎன்றும் கொள்ளலாம். இவர் யாருக்கு வேண்டுமானாலும்
பணம் பெற்றுக் கொண்டு சாட்சி சொல்லுவார்