1331 | பேடியைக் கண்ட பீஷ்பர்-உத்தம வீரனான பீஷ்மர்,பேடிவீரன் மீது அம்பு தொடுக்காதவர். அவரை போரில் வெல்ல முடியாத நிலையில் அர்ஜீனன் பீஷ்மர் முன் ஒரு பேடியை நிறுத்தி வெற்றி கொண்டான் என்பது மகாபாரத நிகழ்ச்சி. |
1332 | அண்டமும் கோழி அண்டமாகிவிடும் - மிகப்பெரிய கோழி அண்டம் (முட்டை) போல ஆகிவிடும். |
1341 | தி.பி.கோ. திருவிதாங்கூர் பீனல்கோர்ட்(குற்றவிசாரணைச்சட்டம்) |
1345 | நடைபடி - நீதிமன்ற நடைமுறைகள் |
1337 | அநியாயங்கள் - பிராது; |
1350 | கெட்டி - கெட்டிக்காரன்; திறமையானவன் |
1351 | ஏட்டுக் குமஸ்தன் தலைமை குமஸ்தா Head Clerk |
1352 | சாடைகாட்டி - அடையாளம் சொல்லி, நாசுக்காகப் பேசி |
1365 | வக்காலத்து - வழக்கு முதலியன நடத்துவதற்கு வக்கீலுக்குக் கொடுக்கும் அதிகாரப் பத்திரம் (power of attorney given to the lawyer for conducting a case) |
1371 | அர்ஜி - Complaint, மனு |
| அவதி - வாய்தா |
1372 | பிரதி உத்திரமும் - பதில் |
1387 | விவகாரங்கள் - வழக்குநிலை |
1388 | குளி - தினமும் குளிப்பது |
| கும்பிடும் - தெய்வத்தை வணங்குதல் |
1390 | மாதாந்தங்கள்-ஒவ்வொரு மாதக் கடைசியிலும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஏதேனும் ஓர் ஆலயத்துக்குச் சுவாமி தரிசனம் செய்யப்போகும் வழக்கும். |
| துப்பட்டா - மேலே அணியும் விலை உயர்ந்த, சரிகை ஆடை தொங்கல் - கழுத்தில் தொங்கவிடும் ஆடை |
1397 | துவர்த்து முண்டு - ஈரம் துவட்டும் துண்டு |
1398 | புட்டு - பிட்டு எனும் பலகாரம் |
1400 | தோய்ப்பன் - ஒருவகை இனிப்புப் பலகாரம். சுசியன் அல்லது சுசியன் எனவும் படும். |
1401 | தொந்தி - தொப்பை |