பக்கம் எண் :

532கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1404 சீலைக்குடை - துணிக்குடை; வசதியுடையவர்கள் துணிக்குடை
வைத்திருப்பர் மற்றவர்கள்ஓலைக்குடை,         தாழங்குடை
வைத்திருப்பர்.
1406 அரைவண்டி - பயணம் செய்வதற்குரிய மாட்டுவண்டி. இது
வில்வண்டி எனவும் படும்.   வண்டிச் சட்டத்தின் அடியே,
அச்சின்மேலே சுருள்வில்       பொருத்தப்பட்டிருப்பதால்
பயணம் சொகுசாக இருக்கும்.
1407 அஞ்சலோட்டம் - தபால் சுமந்து செல்லும் அஞ்சல்காரனின
ஓட்டம் (அஞ்சல் = தபால்)
குலக்குறத்தி - குறிசொல்பவள்
கோடாங்கி - குடுகுடுப்பைக்காரன் (கணிகர் சாதியினர்)
1414 பரல் பரத்தி - சோதிடன் சோழி என்றும் பரலைப் பரத்தி
1416 பதியிருக்கும் பதி-குறி சொல்லும் இடங்கள்;ஐயா வைகுண்டர்
என்னும் திருத்தூதரின் பதிகளில்   தெய்வ ஸன்னதம் வந்து,
எதிர்காலம் பற்றிக் கூறுதல் உண்டு;
1417 பதிவாக - வழக்கமாக
1418 பால்வைத்து .... கணக்குகள் / பதிகளில் சிறப்பு செய்வது
பால்வைப்பது எனப்படும்; கணக்கு பார்த்தல் - எதிர்கால
நிலைபற்றி கூறுதல்
1418 கதி - நல்லநிலை
கொடை - நாட்டார் தெய்வ விழா
1419 கடாத்தறித்து - ஆடுபலிகொடுத்து
1441 படிப்புரை - வீட்டின் வெளியேயும், உள்ளேயும் உள்ள முன்
திண்ணை
யாத்திரைப் படலம் 10
1447 விடுமுறி - கணவனும், மனைவியும் பிரிந்து கொள்வதைக்
குறிக்கும் பிரமாணப் பத்திரம
1456 தீனம் - நோய்
1473 இறுகிவிட்டது - இறுதிநாள் வந்துவிட்டது
1478 தங்கம் - காரணவரின் மகள்
1480 சமைந்து - பருவமடைந்து
1487 பயல் - காரணவரின் மகன்
1500 நம்பல் - நம்புதல்