1510 | முதலை - தன்கைப் பொருளை |
1515 | கூடப்பிறந்து உயிர் கொள்ளும் வியாதி - உடன் பிறந்தே கொல்லும் வியாதி |
1519 | ஐயா - தந்தை; (இங்கு காரணவரின் மைத்துனன்) |
1525 | கைவிஷம் - கணவனைத் தன்வசம் வைப்பதற்காகக் கொடுக்கப்படும் வசிய மருந்து |
1536 | பொட்டணம் - மூட்டை முடிச்சு |
1537 | புழக்கடை - புறக்கடை |
1543 | கட்டம் கட்டி - ஏற்பாடு செய்து |
1550 | அந்திய காலம் - இறுதிக்காலம் |
1551 | குடுக்கை - சிறிய மண் பாத்திரம் |
1553 | அன்னப்பால் - உலையில் உள்ள கொதிநீர், கஞ்சி |
1557 | ஈனாப்பேய்ச்சி - குழந்தை பெறாத நிலையில் இறந்த கர்ப்பிணி பேயாக மாறுவாள்; அவளை ஈனாப் பேயச்சி என்பது மரபு |
1570 | பண்ணைவீடு-நிறைய வயல்கள் உள்ள ஒரு செல்வந்தரின் வீடு |
1573- 77 | நாஞ்சில் நாட்டில் பள்ளிகளில் தமிழ் முக்கிய பாடமாக இருக்கவில்லை. |
1597 | குச்சுக்கடை - மலிவுவிலைப் போலிப் பொருட்கள் விற்கப்பெறும் சிறிய கடை |
1611 | உமையொருபாகத்தேசிகன் - கவிமணிக்கு சிவதீட்சை செய்து வைத்த பெரியவர்.இவரது மடம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது. நாஞ்சில் நாட்டிலும் தேரூர், மற்றும் சில கிராமங்களில் இருந்தன. இவரைப் பற்றிய கவிமணி பாடல் (எண். 38) உள்ளது. |
1613 | கண்டிகை - உருத்திராட்ச மாலை |
1614 | உலந்து பழுத்த - துவைத்துப் பழுப்பேறி உலர்ந்த (உடை) |
1621 | பாட்டா - தாத்தா |
1626 | பற்பல பதிகம்-திருவாசகப் பாடல்களைப்பதிகம் எனக் கூறும் வழக்கு இல்லை; இக்காவியத்தைக் கூறும் பெண் அறியாமல் கூறுவது இது |
1630 | பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப்பெருமான் சிறியோமை ஓவாது உள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட்டுடையான் கழல் புகவே; |