பக்கம் எண் :

534கவிமணியின் கவிதைகள்

Untitled Document
யாத்திரைப்பத்து - திருவாசகம்
கும்பி எரிச்சல் படலம்
1635-
1649
ஏட்டில் பொடிந்த வரிகள்
1656 தரிக்க வொட்டா - தொடர்பு இல்லாமல் ஆக்குவது
1670 நெரிஞ்சில் - நெரிஞ்சிமுள் எனும் செடி.இது படர்ந்து கிடக்கும்
இடத்தில் நடந்து செல்ல முடியாது
1685 குழியல் - சாப்பிடப் பயன்படுத்தும் பாத்திரம்
குடிக்கும் செம்பு - தண்ணீர் குடிக்கும் பாத்திரம்
1688 காப்பு - வளை என்னும் ஆபரணம்
1689 பதக்கம் - சரடு முதலியவற்றில் கோக்கப்படும் கல்லிழைந்த
தொங்கல் கழுத்தணி
சிற்றுரு - கழுத்தணி
பாம்படம் - வயதான பெண் காதில் அணியும் எடை கூடியஅணி
பீலி - கால் விரலில் அணியும் வெள்ளி அணி
1705 பக்கப் பழுத்த - மிக வயதாகி உடல் பழுத்த
1706-08 ஊரும் சதகமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே
பட்டினத்தார்
1709-10 தோவாளைக் கஞ்சிப்புரை -நாஞ்சில் நாட்டில் நாகர்கோவில்
திருநெல்வேலி     சாலையில் 12கி.மீ.தொலைவிலுள்ள ஊர்
தோவாளை.இங்கே               திருவிதாங்கூர் அரசர்
மார்த்தாண்டவர்மாவால் (1728-59) நிறுவப்பட்ட கஞ்சிமடம்
இருந்தது. இதில் ஏழைகளுக்கு எந்தநேரத்திலும்    கஞ்சி
இலவசமாக வழங்கப்பட்டது.
1712 சுவான தேவர் - நாய்கள்
1714 காக்கை பாடினியார் - காகங்கள்
1715 பழ அடியார்கள் - பிச்சைக்காரர்கள்
1716 வெண்சோறு, பட்டைச் சோறு, பாற்சோறு
வெண்சோறு - தொட்டுக்கொள்ள எதுவுமில்லாத சோறு மட்டும்
பட்டைச்சோறு - கோவில்களில் வழங்கப்பட்ட கட்டிச்சோறு
பாற்சோறு - பாலில் வேகவைக்கப்பட்ட சோறு
1718 ஒட்டுத் திண்ணை-அடுத்தவர் வீட்டு வாசலில் உள்ள திண்ணை