முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 535 |
Untitled Document
வையாபுரிப்பிள்ளையின் முன்னுரை |
எனது அருமை நண்பர் கவிமணி ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய பாக்களிற் சில இந்நூலில் வெளிவருகின்றன. இவை கலைமகள் முதலிய பத்திரிகைகளுக்குச் சமீப காலத்தில் உதவப்பட்டன. இவைகளைத் திரட்டி, ஒரு கவிதை நூலாக வெளியிட முன்வந்த அருள்-நிலையத்தர்க்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
கவிதையின் இயல்பை வரையறை செய்வதற்குச் சில நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரது முயற்சியேனும் இதுவரையில் முற்றும் திருப்திகரமாய் முடிந்துள்ளது என்று சொல்வதற்கில்லை. சிவபெருமான் தன்மையைத் தான் கவிதையும் கொண்டிருக்கிறது. அவரது அடியையும் முடியையும் மாலும்அயனுங்காண முடியவில்லையல்லவா? அது போலவே கவிதையின் இயல்பையும் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், இம்முயற்சிகளெல்லாம் பயன் அற்றனவா? இல்லை; இல்லவேயில்லை.
கவிதையின் இயல்புகள் மிகப்பல. அவைகளும் காலந்தோறும் இடந்தோறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி வேறுபடுகின்றன. ஒரு சில அம்சங்களையே ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும் அறிய முயல்வது. எனினும், தாம் கூறுவதே எல்லாவகையாலும் முற்றமுடிந்தஉண்மையெனத் தாமும் நம்பி வாசகர்களையும் மயங்கச் செய்து விடுகிறார்கள். இக்குறையினால் நன்றாக நம் மனத்தில் ஆழ்ந்து பதிந்துவிடுவதற்கு இவ்வகை நூல்கள் உதவுகின்றன. அன்றியும் இந்நூல்களை நாம் கற்குந்தோறும் நமது அறிவு விலாசம் அடைகிறது. கவிதை அனுபவம் மென்மேலும் முதிர்வதற்கு இடமேற்படுகிறது. ஆகவே இவ் ஆராய்ச்சியுரைகள் பயனுடையனவேயாம்.
ஆனால், ஆராய்ச்சியாளர்களெல்லாரும் உண்மைக் கவிதைபற்றிய ஒரு விஷயத்தில் ஒற்றுமை மனம் உடையராயிருக்கிறார்கள்;உண்மையான | |
|
|