Untitled Document 352 | | சின்னஞ் சிறுபள்ளியில் - உனக்கொரு சிங்காரப் பெஞ்சுமிட்டுத் தின்னக் கனியளித்துப் பாலபாடம் செப்புவன் வா, கிளியே! |
353 | | கண்ணுக் கினிமையாகி - எனதிரு காதும் குளிரச் செய்யும் வண்ணப் பசுங்கிளியே! குயிலும் உன் மாதவஞ் செய்ததுண்டோ! |
354 | | பாலுக்குச் சீனியைப் போல் - பசுந்தமிழ்ப் பாடலுக் கின்னிசைபோல், சோலைக்குப் பைங்கிளியை! - உனது துணையும் இனிதே, அம்மா! |
355 | | உள்ளக் களிப்பெழுந்து - வெளியில்வந்து உன்னுருக் கொண்டதுவோ? மெள்ளப் பிடித்துநெஞ்சில் - அணைத்திட வேட்கை மிகுதே, அம்மா! |
| | 51. கிளியை அழைத்தல் | 356 | | பச்சைக் கிளியே! வா வா; பாலும் சோறும் உண்ண வா; கொச்சி மஞ்சள் பூச வா! கொஞ்சி விளை யாடவா, |
357 | | கவலை யெல்லாம் நீங்கவே, களிப் பெழுந்து பொங்கவே, பவழ வாய் திறந்து நீ பாடுவாயோ தத்தம்மா! |
358 | | வட்ட மாயுன் கழுத்திலே வான வில்லை ஆரமாய், இட்ட மன்னர் யாரம்மா? யான் அறியக் கூறம்மா! |
359 | | பையப் பையப் பறந்துவா, பாடிப் பாடிக் களித்து வா; கையில் வந்திருக்க வா, கனி யருந்த ஓடி வா, | |
|
|