1794 | சித்திரை மன்னவன் ‘தியாகநாடு’ 15-8-1948, முந்திய தலைப்பு ‘திருவிதாங்கூர் பொறுப்பாட்சி’ என்பது.மூலத்தில் ராக தாளம் உண்டு.திருவிதாங்கூர் சமஸ்தான அரசர் சித்திரைத் திருநாளின் படம் உள்ளது. |
1795 | நல்ல உபதேசம் ‘கலைமகள்’ நவம்பர் 1948 |
1796 | உன்னாலே என்ன ஆகும் ‘கலைமகள்’ டிசம்பர் 1948, இக்கீர்த்தனையின் சரணம் பாடல்4 ஆம் வரியில் “அல்லாரும் கண்டனவன் அருளைப் பெறாதிருந்தால்” என்ற வரிக்கு “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று நடம் செய்யும்” என்ற பாடம் கையெழுத்து பிரதியில் உள்ளது. |
1797 | கடைக்கண் பாராயோ ‘கலைமகள்’1949ஜனவரிபொங்கல்மலர், இதேகீர்த்தனை‘கல்கி’, ‘தீபாவளி மலரில் (1950) வெளிவந்துள்ளது. கல்கியில் வந்த கீர்த்தனையில் ‘முற்றுமன்பாலே’ எனத் தொடங்கும் பாடலும், ‘எட்டெழுத்தை நெஞ்சில்’ எனத் தொடங்கும் பாடலும் இல்லை. |
1798 | இயற்கையில் ஈசன் இந்தக் கீர்த்தனைமுதலில் ‘அமுத சுரபி’ஆண்டுமலரில்(ஏப்ரல் 1949) வந்தது. பின்னர் ‘கலைமகள்’ செப்டம்பர்1952ல்வந்துள்ளது. இவ்விதழில் இதற்குப் படமும் உள்ளது. படம் வரைந்தவர் ஸீபா. |
1799 | கும்பிடுகிறேன் ‘கலைமகள்’ ஜு ன் 1949 |
1800 | பாடிப்பரவு ‘தினமணி சுதந்திர மலர் 15-8-1949, முந்திய தலைப்பு ‘பாடிப்பரவு நெஞ்சே’ என உள்ளது. தேசிய விநாயகன் என்னும் பெயரில் இது வந்திருக்கிறது. |
1801 | அறிகிலேன் ‘கலைக்கதிர்’ 1949 ஆகஸ்ட் (ஆவணி) |
1802 | தயங்கேன் ‘கலைமகள்’ (ஆவணி) ஆகஸ்ட் 1949 மலர்; இதற்குப் படம் வரைந்தவர் மகான். |