பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு81

Untitled Document
68. ஒத்துழைப்பு
497 இம்மை வாழ்வுக்கும் - மறுமைக்
     கினிய வாழ்வுக்கும்
செம்மை வழிசொல்வோம் - சற்றே
     செவி கொடுப் பீரையா!

498 எத்தனை ஜென்மங்களோ - முன்னம்
     எடுத் தெடுத் தலுத்தோம்;
எத்தனை ஜென்மங்களோ - இன்னும்
     எடுக்கப் போகின்றோம்.

499 துன்பச் சுழியிலே - விழுந்து
     சுழன்று ழலாமல்,
இன்ப வாழ்வடையும் - வழியை
     எண்ண வேண்டுமையா!

500 ஒருவர் வாழ்ந்திடலும் - உலகில்
     ஒருவர் தாழ்ந்திடலும்
அரிய தெய்வத்தின் - செயலென்
     றறைதல் வீணேயாம்.

501 வீடு கட்டி வைத்து - தந்தை
     வேண்டும் பொருள் வைத்தார்;
கூடி வாழாமல் - மக்கள்
     குத்திச் சாகின்றார்.

502 ஈசன் மீதிலே - பழியை
     ஏற்ற லேனையா!
நாச மாவதற்கு - மூலம்
     நாமே தானையா!

503 வைய மெங்குமே - காணும்
     வாழ்வு தாழ்வெல்லாம்,
செய்வினைப் பயனும் - இதிற்
     சிறிதும் ஐயமில்லை.

504 உலகம் முழுவதும் - நோக்கின்
     ஓருடம் பேயாம்
அலகில் ஜீவரெலாம் - அதன்
     அவயவங் களேயாம்.