Untitled Document
505 | | உடலு றுப்புகள்போல் - உலகில் ஒத்துழைப் போமேல், தடையி லாமலே - க்ஷேமம் தழைத்து வருமையா! |
506 | | வறுமை அண்டாது - கொடிய வழக்கும் வாராது; சிறுமை தருஞ் செயல் - ஏதும் தீண்ட மாட்டாது. |
507 | | எமனை அஞ்சாமல் - தீமை யாது மில்லாமல், அமர வாழ்வுமிந்த - உலகில் அடைய லாமையா! |
508 | | உலக க்ஷேமத்தைத் - தரும் உண்மை யிதுவையா! பலபல வேறு - சொல்லிப் பயனொன் றில்லையா! |
| | 69. எனது சுகதுக்கங்கள் | 509 | | வான வெளிதனிலே - கவிந்தெழு மாலைப் பொழுதினிலே, கூனப் பிறைவரவே - சிவன்திருக் கோலம் தெளிவேன், அடி! |
510 | | முற்றிய ஆழியிலே - அலை வந்து மோதி எறிகையிலே, கற்றைக் கதிரெழவே - உமைதிருக் காட்சி வியப்பேன், அடி! |
511 | | தாமரைப் பொய்கையிலே - கதிரொளி தட்டுமவ் வேளையிலே, பூமலர்ந் தோங்கிடவே - அரியென்று போதம் நயப்பேன், அடி! |
512 | | மாமலைச் சாரலிலே - மதமிகு வாரணக் கூட்டத்திலே, காமலர் சிந்திடவே - கணேசர் என் கண்முனே நிற்பார், அடி! | |
|
|