பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு83

Untitled Document
513 மேட்டு நிலங்களிலே - தினைக்கதிர்
     விம்மி விளைகையிலே,
காட்டு மயில் வரவே - குகனும் என்
     காதல் விளைவிப்பார், அடி!

514 காவுயர் சோலையிலே - பசுவொடு
     கன்று களிக்கையிலே,
தாவிப் புலிவிழவே - வருந்துயர்
     தாங்க முடியவில்லை.

515 புல்வளர் கானத்திலே - கலையினம்
     பொங்கிக் குதிக்கையிலே,
கொல்கடு வாய்வரவே - நெஞ்சத்தில்
     கூரம்பு பாய்ந்ததடி!

516 குஞ்சரக் கூட்டத்திலே - ஒன்றையொன்று
     குத்திப் பொருகையிலே,
வெஞ்சின மாவரவே - அதிலுள்ளம்
     வெம்பி அழிந்ததடி!

517 வானுயர் காவினிலே - மதுவினை
     வண்டுகள் சேர்க்கையிலே,
கானவர் வந்திடவே - உதிரம்என்
     கண்கள் சொரிந்ததடி!

518 தேரைகள் ஓடையிலே - இனத்தொடு
     சேர்ந்து மிதக்கையிலே,
நாரைகள் வந்திடவே - பாவிமனம்
     நைந்து குழைந்ததடி!

70. ரோஜாவே ஏன் வாடுகிறாய்?

519 கள்ளன் வந்தான், கள்ளன் வந்தான்,
     கதவை யுடைத்தான் - வீட்டுக்
     கதவை யுடைத்தான்;
கொள்ளை யிட்டென் பொருளை யெல்லாம்
     கொண்டு போய்விட்டான் - ஐயோ!
     கொண்டு போய்விட்டான்.