புலியைத் தேடிப் புறப்பட்டவர் | 11 | பிடிக்கவில்லை. “டேய், ஏன் இப்படி அவனைத் தொந்தரவு செய்கிறாய்? அவனைத் தூங்கவிட மாட்டாய் போலிருக்கிறதே !” என்று கோபித்துக் கொள்ளுவாள். தன் மகனுடைய தூக்கம் கெட்டுப் போகுமே என்று அவள் கவலைப்பட்டாள் !
ஒருநாள், அந்தப் பையன் வெகு நேரம்வரை அப்பாவைத் தூங்கவிடாமல், கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தான். பாட்டிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே, ஒரு பெரிய தடியைத் தூக்கிக் கொண்டுவந்து, “டேய் ! இப்போது பேசாமல் போய்ப் படுக்கிறாயா? அல்லது உதை வேண்டுமா” என்று மிரட்டினாள்.
உடனே அவன் பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டான். அத்துடன் கேள்வி கேட்கும் வழக்கத்தையும் விட்டுவிட்டான் என்று நினைத்து விடாதீர்கள் ! மறுநாள் விடிந்ததும், ‘அப்பா !’ என்று கூவிக்கொண்டே அப்பாவின் அருகிலே சென்றான். எதற்கு? ஏதோ ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான் !
அந்த வயதிலே ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள அவன் ஆசைப்பட்டான் !
தந்தையைக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் திணற வைத்தானே, அதே சிறுவன் பல ஆண்டுகளுக்குப் பின் வளர்ந்து விட்டான் ; பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். |
|
|
|
|