பக்கம் எண் :

14

பெரியோர் வாழ்விலே


     சிறு வயதிலேயே அவன் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தான் என்றால்
பெரியவனானதும் அவனைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மிக மிகக் கெட்டிக்காரனாக,
உலகம் போற்றும் விஞ்ஞானியாகவே அவன் விளங்கினான் ! 

     ‘செடி கொடிகளுக்கு உயிரில்லை ; உணர்ச்சியில்லை. ஒரு செடியை நாம் ஊசியால்
குத்தினால் அது வருந்தாது ;  கத்தியால் வெட்டினால், அது துடிக்காது’ என்றுதான் உலகம்
முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தது.

     ஆனால், ‘செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி
உண்டு ;  இன்ப, துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை
உலகம் அறிய ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியவர் யார் தெரியுமா? ஜகதீஸ்
சந்திரபோஸ் என்ற நம் இந்திய விஞ்ஞானிதான் ! 

     அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றித்தான் நாம் இவ்வளவு நேரமாகப்
படித்தோம் !
(ஜகதீஸ் சந்திரபோஸ் )