16 | பெரியோர் வாழ்விலே | ஆனால், பாவம், அவன் சிறுவனாக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார் !
“அப்பா இறந்து விட்டார். இனி, நம் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதுதான். ஏதேனும் ஒரு வேலையில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை” என்று எண்ணினான் அந்தப் பையன். பல இடங்களில் வேலைக்கு முயன்றான்.
இதைப் பார்த்தார். அந்தப் பையனுடைய அண்ணா. அவருடைய மனம் கலங்கியது. “தம்பிக்கு நல்ல அறிவு இருக்கிறது. நன்றாகப் படிப்பு வருகிறது. அவன் இந்தச் சிறிய வயதிலேயே வேலையில் சேர்ந்தால் படிப்புப் பாழாகிவிடும். எப்படியும் அவனைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்” என்று எண்ணினார்.
ஆனால், அப்போது அவரும் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். எங்கெங்கோ அலைந்தார். கடைசியாகப் பதினைந்து ரூபாயில் ஒரு சிறு உத்தியோகம் அவருக்குக் கிடைத்தது. உடனே, தம்பியை மேல் படிப்புக்கு அனுப்பினார். தமக்குக் கிடைக்கும் பதினைந்து ரூபாயில் தம்பியின் படிப்புக்காக மாதா மாதம் எட்டு ரூபாய் அனுப்பி வைத்தார்.
நமக்கு ஒரு சட்டை தைப்பதென்றாலே எட்டு ரூபாய் போதாது ! ஆனால், அவன் பள்ளிக்கூட சம்பளம் கட்டுவதும் அந்த எட்டு ரூபாயில்தான் ! சாப்பாடு சாப்பிடுவதும் அந்த எட்டு ரூபாயில்தான் ! சட்டை, வேட்டி வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில் |
|
|
|
|