தான் ! புத்தகங்கள் வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில்தான் !
தானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தான். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவான். மற்ற வேளைகளிலெல்லாம் பட்டினிதான் !
இரவில் படிப்பதற்கு எண்ணெய் வாங்க முடியாது. ஆகையால், தெரு விளக்கின் அடியிலே உட்கார்ந்து பாடம் படிப்பான். தெரு விளக்கிலே படித்தாலும் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே பி.ஏ. பட்டம் பெற்று விட்டான் ! தெரு விளக்கில் படிப்பதைப் பற்றிச் சொன்னதும், உங்களுக்கு, சர். டி. முத்துசாமி ஐயர் ஞாபகம் வருகிறதல்லவா? வரும் ; வரும்.
இந்தப் பையனும் பிற்காலத்தில் சாதாரண மனிதனாக இருக்கவில்லை. சிறந்த அறிஞர் ; உயர்ந்த தலைவர் ; பெரிய இராஜதந்திரி ; நல்ல பரோபகாரி என்றெல்லாம் புகழப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே தான், தெரு விளக்கில் படித்த அந்த ஏழைப் பையன் ! * * *
அன்று கோகலேயின் பள்ளி ஆசிரியர் ஒரு கணக்கைக் கொடுத்து, “பிள்ளைகளே, நாளை வரும்போது இந்தக் கணக்கைப் போட்டுக்கொண்டு வர வேண்டும். சரியாகப் போட்டுக்கொண்டு வர வேண்டும். இல்லையேல் உங்களை நன்றாகத் தண்டிப்பேன், தெரியுமா?” என்று எச்சரித்திருந்தார். |