18 | பெரியோர் வாழ்விலே | மறுநாள் மாணவர்கள் எல்லோரும் கணக்கைப் போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால், அவர்களில் கோகலே ஒருவர்தான் சரியாகப் போட்டுக் கொண்டு வந்திருந்தார். மற்றவர்கள் எல்லோருமே தவறாகப் போட்டிருந்தார்கள்.
உடனே ஆசிரியர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லோருமே சுத்த மண்டுகள். கோகலே ஒருவன் தான் இந்த வகுப்பிலே கெட்டிக்காரன்” என்று கூறினார்.
இதைக் கேட்டதும், கோகலே ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தாரா? இல்லை. அவரது முகத்தில் ஆனந்தத்தின் அறிகுறியாவது தோன்றியதா? அதுவும் இல்லை. அப்படியானால், அவர் என்னதான் செய்தார்? அழ ஆரம்பித்து விட்டார். தேம்பித் தேம்பி அழுதார். கண்களிலே கண்ணீர் மளமளவென்று பொங்கி வழிந்தது.
இதைக் கண்ட ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. “கோகலே, ஏனப்பா கண்ணீர் விடுகிறாய்?” என்று திகிலுடன் கேட்டார்.
“என்னை நீங்கள் கெட்டிக்காரன் என்கிறீர்கள். ஆனால், இந்தக் கணக்கை நானாகப் போடவில்லை ; எனக்குத் தெரிந்த ஒருவனுடன் சேர்ந்துதான் போட்டேன். உண்மையில் நான் ஒருவனாகவே இதைப் போட வில்லை” என்று கூறி மேலும் அழுதார்.
இதைக் கேட்டதும், ‘அடடா ! இந்தப் பையன் எவ்வளவு தூரம் உண்மையைக் கடைப்பிடிக்கிறான் !’ |
|
|
|
|