என்று எண்ணி எண்ணி வியந்தார் ஆசிரியர். அவர் மட்டுந்தானா வியந்தார்? மற்ற மாணவர்களும் வியந்தார்கள் ! * * * பூனாவில் ‘புதிய ஆங்கிலப் பள்ளிக்கூடம்’ என்ற ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அது ஒரு தருமப் பள்ளிக்கூடம். அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லை ; பெரிய மூலதனமும் இல்லை. அப்படியிருந்தும் கோகலே தம்முடைய படிப்பு முடிந்தவுடன் அந்தப் பள்ளியில் ஓர் ஆசிரியராகப் போய்ச் சேர்ந்தார்.
அவர் நினைத்திருந்தால், ஏதேனும் ஒரு பெரிய அரசியலார் பள்ளியில் நல்ல சம்பளத்தில் சேர்ந்திருக்கலாம். பரோபகார எண்ணத்துடன் பாடுபட வேண்டும் என்று நினைத்தார்.
புதிய ஆங்கிலப் பள்ளியில் மாதம் முப்பத்தைந்து ரூபாய் தான் அவருக்குக் கிடைத்து வந்தது. மகிழ்ச்சியுடன் அதைப் பெற்று மாணவர்களுக்கு ஆர்வமுடன் கல்வி கற்பித்து வந்தார்.
அன்றியும், அந்தப் பள்ளிக்கூடத்தை உயர்தரக் கலாசாலையாக்க வேண்டுமென்று நிர்வாகிகள் நினைத்தார்கள். அதற்கு உதவியாக ‘தட்சிண கல்விச் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கல்விச் சங்கத்தில் சேர்ந்து, அதன் வளர்ச்சிக்காக இருபது ஆண்டுகள் உழைப்பது |