என்று கோகலே சபதம் எடுத்துக் கொண்டார். எவ்வளவோ துன்பங்கள் இடையிலே வந்தன. ஆயினும், அவர் தம்முடைய உறுதியை விடவில்லை. இருபது ஆண்டுகள் அந்தக் கல்விச் சங்கத்தில் ஆசிரியராக இருந்து தம்முடைய சபதத்தை நிறைவேற்றி விட்டார். 1885-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை அவர் அங்கேயே இருந்து அரும்பாடுபட்டு வந்தார்.* * * கோகலே ஓய்வு நேரங்களிலெல்லாம் படித்துக் கொண்டேயிருப்பார். ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதில் சிறந்த பகுதி ஒன்று இருந்தால் உடனே மனப்பாடம் செய்துகொள்வார். மனப் பாடம் என்றால், சிலர் நெஞ்சிலே குத்திக் கொண்டு திரும்பத் திரும்ப உரக்கப் படிக்கிறார்களே, அப்படியல்ல ! ஒரு தடவை அல்லது இரு தடவை படிப்பார். உடனே, அது அவர் மனத்தில் நன்றாகப் பதிந்து விடும். கடினமான பாடல்கள், பெரிய அறிஞர்களின் சொற்பொழிவுகள் முதலியவற்றையும் மனப்பாடம் செய்து வந்தார். இதனால் அவருக்கு அழகாகவும் ஆழ்ந்த கருத்துடனும் பேசும் சக்தி உண்டானது. எவருடன் பேசினாலும் அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார் ; ஆழ்ந்த கருத்துடன் பேசுவார்.
ஒரு நாள் கோகலேயைப் பார்ப்பதற்காக ஓர் ஐரோப்பிய நீதிபதி வந்தார். கோகலேயுடன் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் தங்கிப் பேச அவருக்கு |