பக்கம் எண் :

சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர்

31


     மருத்துவர் இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து நெருப்பிலே வைத்தார். அது நன்றாகக்
காய்ந்தது. கறுப்புக் கம்பி சூடு ஏறிச் சிவப்புக் கம்பியாக மாறியது. அதை எடுத்தார்
மருத்துவர் ;  பையனின் கைக்கு அருகில் கொண்டு போனார்.

     அப்போது அவர் கைகள் நடுநடுங்கின. ‘இவனோ சிறு பையன் ;  சூடு போட்டால்
தாங்குவானா? துடிதுடித்து அலறுவானே !’  என்று நினைத்தார். உடனே, அவர்
தயங்கினார். பிறகு என்ன நினைத்தாரோ, காய வைத்த கம்பியைப் பேசாமல் கீழே
போட்டுவிட்டார்.

     இது அந்தப் பையனுக்கு ஏமாற்றமாக இருந்தது. உடனே அவன் அந்த மருத்துவரை
எதுவுமே கேட்காமல் ‘சட்’டென்று கீழே குனிந்தான். ‘தக தக’ என்று ஒளி வீசிக்கொண்டு
கிடந்த கம்பியை எடுத்தான். எடுத்துத் தன் கையிலிருந்த சிலந்தியில் வைத்து
அழுத்தினான் !  உடனே, ‘சடசட’ என்ற சத்தம் வந்தது. சிலந்தியிலிருந்த கெட்ட
நாற்றமும் வெளியேறியது.

     பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும், “ஐயையோ !”  என்று அலறினர். ஆனால்,
அந்தப் பையனோ சிறிதும் அசையவில்லை ;  ‘ஆய் !  ஊய் !’  என்று அலறவுமில்லை ; 
‘உஸ்’ என்றுகூடச் சத்தம் போடவில்லை ! 

     அவனுடைய தைரியத்தையும், பொறுமையையும் கண்டு அங்கிருந்தோர் வியந்தனர்.
ஆனால், இரும்புக் கம்பியால் சூடு போட்டுக்கொண்ட அதே பையன் ஒரு காலத்தில்
அஞ்சா நெஞ்சம் படைத்த