சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர் | 33 | புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். பிறகு, “அடே, நீ இதை எங்கே வாங்கினாய்?” என்று கோபமாய்க் கேட்டார்.
“கடையிலே வாங்கினேன், ஐயா” என்று அமைதியாகப் பதிலளித்தார் படேல்.
“ஏன் கடையில் வாங்கினாய்? என்னிடத்தில் தான் வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறேனல்லவா? நீ சட்டத்தை மீறலாமா?”
“சட்டமா ! அது என்ன?”
“நான் உன் ஆசிரியர், என்னை எதிர்த்தா பேசுகிறாய்?”
“நீங்கள் எங்கள் ஆசிரியர் தான், சந்தேகமில்லை. ஆனால், நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத் தான் வருகிறோம் ; வியாபாரம் செய்ய வரவில்லை.”
“அடே, அதிகப் பிரசங்கி ! போதும். நிறுத்து. இன்னொரு தடவை இப்படிச் செய்தால், உடனே உன்னைப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தி விடுவேன்”
“அவ்வளவு சிரமம் உங்களுக்கு வேண்டாம், ஐயா. நாளையிலிருந்து நானே இங்கு வருவதை நிறுத்திக் கொள்கிறேன்” என்று தலைநிமிர்ந்து கூறினார், படேல்.
ஆசிரியர் அசந்து போய்விட்டார் ! பேசாமல் இடத்தில் போய் உட்கார்ந்தார்.
மறுநாள், படேல் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. அவர் மட்டும் வராதிருந்தால் அந்த ஆசிரியர் கவலைப்பட்டிருக்கமாட்டார். ஆனால், அந்த |
|
|
|
|