வகுப்புப் பிள்ளைகளில் ஒருவர்கூட வரவில்லை. ஆம், எல்லோரும் படேல் செய்ததே நியாயம் என்று கருதி அவர் பக்கம் சேர்ந்து விட்டனர்.
இறுதியில், அந்த நகரிலுள்ள ஒரு பெரியவர் இந்த வழக்கில் தலையிட வேண்டி வந்தது. படேலையும், அந்த ஆசிரியரையும் அவர் சமாதானப் படுத்தி வைத்தார். * * * ஓர் ஆசிரியர் வீடு. அந்த வீட்டில் படேலும், அவருடன் சில சிறுவர்களும் தங்கியிருந்து படித்து வந்தனர். அவர்கள் படிப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் அங்கே தான். மொத்தத்தில் அது ஒரு சிறு குருகுலம் போலவே விளங்கி வந்தது.
படிப்பைப் பற்றிய செய்திகளை ஆசிரியர் கவனித்து வந்தார். சாப்பாடு பற்றிய விஷயங்களை அவருடைய மனைவி கவனித்து வந்தாள்.
எல்லோருக்கும் இரவில் தூங்கப் போவதற்கு முன்னால் பால் கொடுப்பது வழக்கம். ஆசிரியரின் மனைவி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குவளை நிறையப் பால் கொண்டு வந்து கொடுப்பாள். அன்று ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டே வந்தாள். இறுதியாகப் படேலுக்குக் கொடுக்க மட்டும் பால் இல்லை. என்ன காரணத்தாலோ, அன்று பால் குறைந்துவிட்டது. வேறு வழியில்லாததால் அவள் பேசாமல் இருந்து விட்டாள்.
படேல் பால் சாப்பிடவில்லை என்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டு விட்டார். உடனே அவர் தம் |