மனைவியைப் பார்த்து, “படேலுக்கு ஏன் பால் கொடுக்கவில்லை?” என்று கேட்டார்.
“பால் என்றால் படேலுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை” என்று ஏதோ ஒரு சாக்குச் சொல்லி வைத்தாள் அந்த அம்மாள்.
படேல், அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டு தான் படுத்திருந்தார். அப்போது அவர் தூங்கவில்லை !
மறுநாள், ஆசிரியரின் மனைவி முன்போல் பால் கொண்டு வந்து கொடுத்ததும், “வேண்டாம். எனக்குப் பால் பிடிக்காது !” என்று கூறிவிட்டார் படேல்.
அந்த அம்மாள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள் ; கொஞ்சிப் பார்த்தாள். ஊஹு ம் ... ஒன்றும் பலிக்க வில்லை !
அன்றிலிருந்து படேல் அந்த ஆசிரியர் வீட்டில் தங்கியிருக்கும் வரை ஒரு தடவை கூடப் பால் அருந்தவில்லை ! அவருடைய பிடிவாதத்தைக் கண்டு அந்த அம்மாளே ஆச்சரியப்பட்டாள் ! * * * 1917-ஆம் ஆண்டு ஆமதாபாத் நகரில் பல இடங்களில் கொடிய பிளேக் நோய் பரவியது. பிளேக் நோய் என்றால் யார்தான் பயப்படாமல் இருக்க முடியும்? வசதியுள்ளவர்கள் நகரைவிட்டு வெளியூருக்கு ஓடிவிட்டனர். கோர்ட்டுகள், சர்க்கார் அலுவலகங்கள் மூடப்பட்டன.
அப்போது, படேல், நகர சுகாதாரக் குழுவின் தலைவராயிருந்தார். அவர் பிளேக் நோயை ஒழிக்கத் |