36 | பெரியோர் வாழ்விலே | தீவிரமாகப் பாடுபட்டார். காலையிலும் மாலையிலும் சுகாதார அதிகாரிகளுடன் புறப்பட்டு ஒவ்வொரு வீடாகச் செல்வார்.
வீடு வீடாகச் செல்லும் போது ஓர் ஏழைக் குடும்பத்தைப் பார்க்க நேர்ந்தது. அக்குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் பிளேக் நோய் உண்டாவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. அப்போதே தக்க மருந்து கொடுத்தால், நோய் வராமல் தடுத்துவிடலாம் என்று படேல் நினைத்தார். நினைத்த படி காலையிலும், மாலையிலும் தாமே நேராகச் சென்று அக்குடும்பத்தாருக்கு மருந்து கொடுத்து வந்தார். துரதிர்க்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் அக்குடும்பத்தில் இறந்து விட்டார். மற்றவர்கள் படேலின் தீவிர முயற்சியால் உயிர் தப்பினர்.
‘இவ்வளவு தைரியமாக அவர் பிளேக் இருந்த இடங்களுக்குச் சென்றாரே, அது தொத்து நோயல்லவா? அவரையும் பிடித்துக் கொள்ளாதா?’ என்று தானே கேட்கிறீர்கள்?
ஆம், ஆம், அது தொத்து நோய்தான். படேலையும் அது சும்மாவிட வில்லை. அவருக்கும் பிளேக் நோய் கண்டுவிட்டது !
‘ஐயோ ! ஊருக்கு உழைக்கப் போய்த் தம் உயிருக்கே ஆபத்தைத் தேடிக்கொண்டு விட்டாரே !’ என்று பலரும் நினைத்து வருந்தினர். ஆனால், கடவுள் அருளால் அப்போது நம் படேல் உயிர் பிழைத்துவிட்டார் என்று நான் சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் ! * * * |
|
|
|
|