பக்கம் எண் :

38

பெரியோர் வாழ்விலே


வந்த ஏழு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவில்லை. இவரை மட்டும் விசாரணை
செய்கிறீரே, ஏன்?” என்று கோபமாய்க் கேட்டார்.

     உடனே படேல், “அது என் விருப்பம்” என்றார்.

     இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட், “என்ன, உமது விருப்பமா?” என்று ஆத்திரத்துடன்
கேட்டார்.

     “சந்தேகமென்ன? இதை வழக்கு மன்றம் மறுக்க முடியாது. இங்கு நடப்பது வழக்கே
அல்ல ;  வெறும் நாடகம். போலீஸாரே இந்த நாடகத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
மடாதிபதியை உடனே விடுதலை செய்ய வேண்டும். பொய் கூறிய சாட்சிகளை உடனே
கைது செய்ய வேண்டும். இல்லாவிடில் நான் விடப் போவதில்லை. மேல் கோர்ட்டில் இதே
வழக்கை நடத்தி உண்மையை அம்பலப் படுத்துவேன். அப்போது தாங்களும் அங்கு வந்து
நிற்க வேண்டியிருக்கும்” என்று அடித்துப் பேசினார் படேல்.

     இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட்டும் போலீஸாரும் பதைபதைத்துப் போயினர். முடிவு?

     அன்றே மடாதிபதிக்கு விடுதலை கிடைத்தது ! 


(படேல்)