பக்கம் எண் :

பெயர் தெரியாத கவிஞர் ! 


     அது ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடம். அங்கே படித்துக் கொண்டிருந்தான், ஒரு
மாணவன். அவனுக்குத் தமிழிலே ஆர்வம் அதிகம். அவனுக்குப் பாட்டு இயற்றவும்
நன்றாகத் தெரியும். ஆனாலும், தனக்குப் பாட்டு எழுதத் தெரியும் என்பதை அவன்
வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

     ஒருநாள் அந்த மாணவன் மனத்திலே ஒரு பாட்டுத் தோன்றியது. அதை ஒரு
காகிதத்தில் எழுதினான் ;  படித்துப் பார்த்தான். படிக்கப் படிக்க