மாணவர்கள் யாவரும் அந்தப் பாடலின் பெருமையை உணர்ந்தனர். ‘இதை இயற்றிய கவிஞர் யாராயிருக்கும்?’ என்று அவர்களும் சிந்தித்தனர்.
ஆனால், அதை இயற்றிய கவிஞர் அதே வகுப்பில் அவர்களுக்கு மத்தியிலேயே உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை !
இப்படி ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான் ! கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் இப்போது யாருக்குத்தான் தெரியாது ! * * * கவிமணி சிறு பிள்ளையாயிருக்கும்போது, ஒரு மடத்திலுள்ள தம்பிரானிடம் தமிழ் கற்று வந்தார். அவருடன், அவர் வயதுச் சிறுவர்கள் சிலரும் படித்து வந்தார்கள்.
அன்று வழக்கம்போல் கவிமணியும், அவர் நண்பர்களும் மடத்துக்கு வந்தனர். அப்போது, அங்கே அப்பமும், வடையும் ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் சிவராத்திரியாதலால் கோவிலிலிருந்து மடத்திற்கு அவை வந்திருந்தன.
கவிமணியையும், மற்றவர்களையும் தம்பிரான் அருகில் அழைத்தார். “இப்போது நான் இந்த அப்பம், வடை முதலியவற்றை உங்களுக்குத் தரப் |