பக்கம் எண் :

44

பெரியோர் வாழ்விலே


இப்படி எத்தனையோ விதமான வாழ்த்துத் தந்திகள் அனுப்புகிறோம். ஆனால், அந்தக்
காலத்தில் ஏதேனும் துன்பமான செய்தியாக இருந்தால் தான் தந்தி வருவது வழக்கம்.
ஆகையால் ‘தந்தி’ என்றாலே எல்லோருக்கும் பயம்தான் ! 

     அப்படியிருக்கும் போது, தந்தியை வாங்கியதும் உடனே பரபரப்புடன் பிரித்துப்
பார்த்திருக்க வேண்டாமோ? பார்க்கவில்லை, நமது கவிமணி, ஏன்?

     ‘இதில் ஏதேனும் துன்பச் செய்தி இருக்கலாம். அது எப்படிப் பட்டதாக இருக்குமோ?
அதைப் படித்ததும், நிச்சயம் நமக்குக் கலக்கம் ஏற்படும். மற்றவர்களும் செய்தியை அறிந்து
கொண்டுவிடுவார்கள். மகிழ்ச்சியோடு எல்லோரும் சாப்பிடப் போகிறார்கள். இப்போது
இந்தத் தந்தியை வெளியிட்டால் எல்லோரும் வருந்துவார்கள். விழாவும் அமங்கலமாக
முடியும்’ என்று எண்ணியே தந்தியைப் பிரித்துப் பார்க்காமல் வைத்திருந்தார்.

     ‘தந்தியில் என்ன இருக்குமோ ! எது இருக்குமோ !’  என்று உள்ளூர அவர்
கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆயினும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

     மாலை நேரம் விழா முடிந்து எல்லோரும் அவரவர் வீடு சென்றனர். எல்லோரும்
சென்ற பிறகு, கவிமணி அந்தத் தந்தியை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்தார். உடனே
திடுக்கிட்டார் ;  கண் கலங்கினார்.