பக்கம் எண் :

பெயர் தெரியாத கவிஞர்

45


     ‘தங்கள் மருமகள் இறந்து விட்டாள். உடனே புறப்பட்டு வரவேண்டும்’ என்று
அந்தத் தந்தியில் இருந்தது ! 

     உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டார், கமிணி. அந்த அவசரத்தில் மனைவியிடம்
கூட அவர் செய்தியைச் சொல்லவில்லை ! 
 

* * *
 

     ‘கிளிக்கு ஒரு காலில் எத்தனை விரல்கள்?’ என்று கேட்டால், பலர் ‘ஐந்து’ என்று
தயங்காமல் கூறுவார்கள்.

     ஆனால், நம்மைப்போல் அதற்கு ஐந்து விரல்கள் இருப்பதில்லை. நான்கே விரல்கள்
தாம் உண்டு.

     இந்த நான்கு விரல்களில், ‘முன்னால் இருக்கும் விரல்கள் எத்தனை? பின்னால்
இருக்கும் விரல்கள் எத்தனை?’ என்று ஒரு கேள்வியை ஒரு சமயம் கவிமணி சில
இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார். அப்போது அவர் ஓர் ஆரம்பப் பள்ளியில்
ஆசிரியராக இருந்தார்.

     பாடப் புத்தகத்தில் கிளியைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதில் கிளியின் படமும்
வரையப்பட்டிருந்தது. அந்தக் கிளியின் படத்தைப் பார்த்த பிறகு தான் கவிமணி இந்தக்
கேள்வியைக் கேட்டார்.

     இளைஞர்கள் புத்தகத்தைப் பார்த்துக் கூற முயன்றனர். ஆனால், கவிமணி,
‘புத்தகத்தை