46 | பெரியோர் வாழ்விலே | எல்லோரும் மூடி வைத்துவிடவேண்டும்’ என்று முன்பே அறிவித்து விட்டார்.
எல்லோரும் அவ்வாறே புத்தகத்தை மூடி வைத்து விட்டனர். சிலர், ‘கிளிக்கு முன்னால் மூன்று விரல்களும், பின்னால் ஒரு விரலும் இருக்கின்றன’ என்றனர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் “நாங்கள் கூறியது தான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன்னால் மூன்று விரல்கள் ; பின்னால் ஒரு விரல் !” என்று ஆனந்தக் கூச்சலிட்டனர், இளைஞர்கள்.
ஆனால் கவிமணி, “நீங்கள் சொன்னதும் தவறு ; இந்தப் படத்தில் இருப்பதும் தவறு. கிளிக்கு முன்னால் இரண்டு விரல்களும் பின்னால் இரண்டு விரல்களுமே உண்டு” என்றார் !
அதை அப்போது சிலர் நம்பவில்லை. ஆனால், கிளியை நேரில் பார்த்த பிறகுதான், ‘ஆமாம், கவிமணி கூறியது சரிதான்’ என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். (கவிமணி) |  |
|
|
|
|