 | சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர் ! | மணி அடித்தது, பூகோள ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் மாணவர்கள் எல்லோரும் மரியாதையாக எழுந்து நின்றனர். ‘மரியாதையாக எழுந்து நின்றனர்’ என்று கூறுவதைவிட ‘நடுநடுங்கிக் கொண்டே எழுந்து நின்றனர்’ என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆம், அந்த ஆசிரியர் அவ்வளவு பொல்லாதவர் ! அவருக்குக் கோபம் வந்து விட்டால், மாட்டை அடிப்பது போல் மாணவர்களை அடித்துவிடுவார் ! |
|
|
|
|