48 | பெரியோர் வாழ்விலே | அவர் வகுப்பிலே வந்து உட்கார்ந்ததும், கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
“அடே நரேந்திரா, எழுந்திரு” என்று கூறிவிட்டு, முதல் நாள் நடந்த பூகோளப் பாடத்தில் ஒரு கேள்வி கேட்டார்.
நரேந்திரன் உடனே எழுந்தான். கேட்ட கேள்விக்குச் சிறிதும் தயக்கமில்லாமல் விடை அளித்தான்.
அவன் கூறிய பதிலைக் கேட்டதும் ஆசிரியர், “அடே, என்னடா தப்பாக உளறுகிறாய்?” என்று மிரட்டினார்.
“இல்லை ஐயா சரியாகத்தான் சொல்லுகிறேன்”
“என்ன ! சரியாகத்தான் சொல்லுகிறாயா? அப்படியானால், என்னை முட்டாள் என்கிறாயா?”
“இல்லை ஐயா, நான் சொன்ன விடை சரியானது தான்”
“தவறான விடையைக் கூறிவிட்டு எதிர்த்து வேறா பேசுகிறாய்? மடையா” என்று கோபமாய்க் கூறிக்கொண்டே அவர் எழுந்து வந்தார். பிரம்பினால் நரேந்திரனை அடிக்க ஆரம்பித்து விட்டார்.
அவர் என்ன தான் அடித்தாலும் நரேந்திரன், தான் சொல்வதே சரி என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினான். திரும்பத் திரும்பச் சொன்னதையே அவன் சொல்லி வந்ததால் அவருடைய கோபம் அதிகமாகி விட்டது. கோபம் அதிகமாகி விட்டால் தான் தலைகால் தெரியாதே ! ஆத்திரத்தில் அவர் நரேந்திரனை அடி அடியென்று நன்றாக அடித்து விட்டார். |
|
|
|
|