கடைசியில் கை ஓய்ந்த பிறகே அவர் இடத்தில் போய் உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்றது. அவரது கோபம் அடங்கியது. நிதானமாக யோசித்தார். நரேந்திரன் கூறிய விடை சரிதான் என்பது அப்போது தான் அவருக்குப் புரிந்தது. தம் தவற்றை உணர்ந்தார். உடனே, எழுந்து நரேந்திரனிடம் வந்தார். “நரேந்திரா, உன்னை நான் தவறாக அடித்து விட்டேன், நீ சொன்னதுதான் சரி. என்னை மன்னித்துவிடு” என்று வருத்தத்துடன் கூறினார்.
வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் எல்லோரும் இக்காட்சியைக் கண்டு வியந்தனர். அந்த உபாத்தியாயரும் அன்று முதல் தம்முடைய ‘பிரம்படி வேலை’யை நிறுத்திக் கொண்டார்.
சரியான விடையளித்தும் தண்டனை பெற்றானே அந்த மாணவன் அந்த நரேந்திரன் பிற்காலத்தில், டாக்டர் நரேந்திரனாகவோ, முதலாளி நரேந்திரனாகவோ வரவில்லை. உலகமே போற்றும் ஒரு சிறந்த வேதாந்தியாக - இந்து மதத்தின் உயர்ந்த கொள்கைகளை உலகுக்கு எடுத்துக் காட்டி வியக்கச் செய்த ஒரு பெரிய மகானாக விளங்கலானான் ! அந்த மாணவன் பிற்காலத்தில் ஒரு மகானாக விளங்கியது போலவே, நரேந்திரன் என்ற அவனுடைய பெயரும் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று விளங்கலாயிற்று ! * * * விவேகானந்தரின் அப்பா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவரிடம் தினந்தோறும் பல கட்சிக்காரர்கள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் |