பக்கம் எண் :

100காளித்தம்பியின் கதை

சொன்னேன். ஆசிரியர் நமக்குத் தெய்வம்! இனி மறந்தும் இப்படிப் பேச
நினைக்காதே” என்றான் பழனி.


     குருசாமி வெட்கித் தலை குனிந்தான். “என்னை மன்னித்துவிடு பழனி.
இனி இந்தத் தவறை எப்பவும் செய்யமாட்டேன்” என்றான்.


     அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் நாவுக்கரசு “குருசாமி,
உன்னிடம் ஒன்று பேசவேண்டும் இங்கே வா” என்றான்.


     குருசாமி, “என்ன பேசவேண்டும்? அதை இங்கேயே பேசலாமே? இவன்
என் நண்பன்...பழனி! புதிதாக நம் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். உனக்குத்
தெரியுமா? ரொம்பக் கெட்டிக்காரன். மகா புத்திசாலி!” என்று பழனியை
அறிமுகப்படுத்திவிட்டு. ‘பழனி, இவன் நாவுக்கரசு. பத்தாம் வகுப்பு
படிக்கிறான்” என்றான்.


     பழனி நாவுக்கரசுவுக்கு வணக்கம் தெரிவித்தான். நாவுக்கரசு, “ஓ, நீயா!
அந்த ஓட்டல் முன்னே பிச்சை எடுக்கிற பையனில்லே நீ” என்று கேட்டான்.


     பழனியின் முகம் மாறியது.


     “ஓட்டலுக்கு முன்னே நான் பிச்சையெடுக்கவில்லை. சைக்கிளைத்
துடைக்கிறேன். அந்த உழைப்புக்காகத்தான் பணத்தைப் பெறுகிறேன். நீ
அதைத் தவறாகப் புரிந்து கொண்டாய்” என்றான் பழனி.


     “சைக்கிள் துடைப்பது மட்டும் என்ன பெரிய கலெக்டர் வேலையா?
சே...சே.... நம் பள்ளி மாணவன் கூலிக்காரன் போலச் சைக்கிள் துடைப்பதும்,
பிச்சைக்காரனைப்போலக் காசு வாங்குவதும் மகா கேவலம். உன்னால்
பள்ளிக்கூடத்துமானமே போகிறது” என்றான் நாவுக்கரசு.


     “நம் பள்ளிக்கூடம் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம்தானே?
நீயும் சம்பளம் கட்டிப் படிக்க முடியாத ஏழை என்று சொல்லித்தானே இங்கே
சேர்ந்திருப்பாய். உனக்குச் சாப்பாடு போட பெற்றோர்கள் இருக்கிறார்கள்.