பக்கம் எண் :

சிறுவர் நாவல்107

நண்பர்களுக்கும் நன்றி சொன்னான். மணி அதற்குள் ஐந்தாகிவிட்டது.
இன்னும் அரைமணிக்குள் ஏஜென்ஸிக்குப் போகவேண்டும். அதனால்
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்கு ஓடினான்.


     “அறையில் காளி இருந்தால் நன்றாக இருக்கும். அவனிடம் இந்த
மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லலாம்” என்று நினைத்துக்கொண்டே
வீட்டுக்குச் சென்றான்.


     அறையில் அவன் விரும்பியவாறு காளி இருந்தான். காளிக்குச் சொல்ல
பழனி ஒரு மகிழ்ச்சியான செய்தியை வைத்திருந்தான். ஆனால் அவனுக்குச்
சொல்ல அதைக்காட்டிலும் மகிழ்ச்சியான மற்றொரு செய்தியை வைத்துச்
கொண்டிருந்தான் காளி.