2 துறவியின் கைத்தடி நாகமாணிக்கத்தின் தலையைப் பிளந்திருக்கும். அதற்குள் பழனி, துறவிக்கும் நாகனுக்கும் இடையில் புகுந்து நின்றான். “பெரியவரே, பெரியவரே” என்று கதறினான். நாகனை நோக்கிச் சென்ற தடி அப்படியே நின்றது. பெரியவரின் ஓங்கிய கை பழனியைக் கண்டதும் தாழ்ந்தது. ஆனாலும் அவர் கோபம் தீர்ந்ததாகத் தெரியவில்லை. தன் தலை சுக்கு நூறாகச் சிதறி விடுமோ என்று பயந்த நாகன் அவ்வாறு நடக்காததைக் கண்டான். என்றாலும் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “பெரியவரே, நாகன் தெரியாமல் ஏதோ பேசிவிட்டான் தயவு செய்து அவனை மன்னித்துவிடுங்கள்” என்று வேண்டினான் பழனி. துறவி ஒரு கையால் பழனியை இழுத்து அணைத்துக் கொண்டார். |