இடத்திற்குச் சென்றான். மாணவர்கள் வகுப்புவாரியாகப் ‘ப’ வடிவில் நின்றிருந்தார்கள். அதன் நடுவில் இரு வட்டங்கள் ஒன்றில்தான் தலைமையாசிரியர் நின்றிருந்தார். அவருக்குப் பழனி ‘சல்யூட்’ செய்தான். பிறகு பழைய மாணவர் தலைவன் பழனியை அழைத்துக்கொண்டு போய் மற்றொரு வட்டத்தில் நிறுத்தினான். அவனுடன் கைகுலுக்கி விட்டு அவன் தன் வகுப்பு மாணவர்களுடன் நின்று கொண்டான். தலைமையாசிரியர் பேசினார்: “மாணவர்களே, ஒன்பதாம் வகுப்பு மாணவன் பழனி இன்று முதல், மாணவர் தலைவனாகிறான். பழனி முதல் நாளே நம் பள்ளிக்குப் புகழ் தேடித் தந்திருக்கிறான். மல்லிகை வார இதழில், ‘காளித்தம்பி’ என்ற புனைபெயரில் அவன் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். ஒரு நல்ல எழுத்தாளன் நமது பள்ளியின் மாணவன் என்றால் நமக்குப் பெருமை தானே. பழனி தான் வகிக்கும் பதவிக்கும், பயிலும் பள்ளிக்கும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் புகழ் தேடித் தரவேண்டும்” என்று சொன்னார். காலையில் பத்திரிகை போடச் சென்ற காளி, தலைமை ஆசிரியரிடம் பழனியின் கதை வந்ததைச் சொல்லியிருந்தான். அவர் உடனே அதைப் படித்து மகிழ்ந்தார். அத்துடன் நில்லாமல் மாணவர்களிடமும் அதைக் கூறிப்பாராட்டினார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினர். பழனி நன்றி தெரிவித்தான். அதன்பின் மாணவர் தலைவனாக நின்று, மாணவர்களைக் கலைந்து செல்ல மிடுக்கோடு கட்டளையிட்டான். பழனி மாணவர் தலைவனாக மாறினதும் பல மாறுதல்கள்நடந்தன. பள்ளியின் முன்னே பெரிய கரும்பலகையில் அன்றாடச் செய்திச்சுருக்கத்தை அவனே தயார் செய்து எழுதினான். தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று ஓர் அறையில் வாசகசாலை அமைத்தான். அங்கே சிறந்த பத்திரிகைகள் மாணவர்கள் படிக்க வரவழைக்கப்பட்டன. அதற்கு ஒரு |