பக்கம் எண் :

சிறுவர் நாவல்113

மாணவனைப் பொறுப்பாக்கினான். பள்ளியின் சுற்றுப்புறத்தைத்
தூய்மையாக்கச் சிலரை நியமித்தான். அவர்கள் குப்பைக் காகிதங்களை எங்கே
கண்டாலும் அதை எடுத்து அதற்கான இடத்தில் போடுவார்கள். காலை
இரண்டு பீரியட்களுக்குப்பின் இன்டர்வெல் வருகிறதல்லவா? அந்த நேரத்தில்
தண்ணீர்ப் பானையருகே மாணவர்கள் மோதிக்கொள்வதைக் கண்டான்.
அவர்களை ஒழுங்காக வரிசையில் நிற்கச் செய்து நீர் வழங்கச் சிலரை
நியமித்தான். அத்தோடு தானும் அவர்கள் வேலையில் பங்கு கொண்டான்.


     பள்ளியில் பழனியின் புகழ் வளர்ந்தது. அனைவரும் அவனை
விரும்பினர். ஆனால் ஒருவன் மட்டும் அவனை வெறுத்தான். அடியோடு
வெறுத்தான். அவன் பழனியிடம் தோல்வி கண்ட நாவுக்கரசு.


     அது ஆகஸ்டு மாதம். முதல் வாரம்! கடந்த மாதம் வைத்த தேர்வில்
மாணவர்கள் வாங்கிய மார்க்கின்படி அவர்களை வரிசையாக உட்கார
வைத்தனர். முன்பு கடைசியில் உட்கார்ந்த பழனி, முதல் வரிசையில், முதல்
பெஞ்சியில் முதல்வனாக உட்கார்ந்திருந்தான். பழனி முதல் மார்க்கு
வாங்கினான். யாரும் அப்பாவால் மார்க்கு வாங்கினான் என்று
சொல்லவில்லை. பழனி அதை எண்ணிப் பூரித்தான்.


     பள்ளியைப் பொறுத்தவரை அவனுக்குக் குறை ஒன்றும் இல்லை.
நாவுக்கரசு மட்டும்தான் அவனைப் பகைவனைப் போலக் கருதி வந்தான்.
அடிக்கடி சைக்கிள் துடைக்கும் ஓட்டல் அருகே சைக்கிளுடன் வருவான்.
“டேய்...இங்கே வா... இந்த சைக்கிளைக் கண்ணாடிபோலத் துடைத்துவை”
என்று உத்தரவு போடுவான். “சீ...இந்த வேலையையும் சரியாகச் செய்ய
முடியவில்லையே” என்று திட்டுவான். சில சமயம் தன் நண்பர்களுடன் வந்து
நின்றுகொண்டு பழனியைக் கிண்டல் செய்வான்.


     இதைத்தான் பழனியால் பொறுக்க முடியவில்லை. “மதுரையில் ஒரு
நாகமாணிக்கம் என்றால் சென்னையில் ஒரு நாவுக்கரசா?” என்று வருந்தினான்.
பொல்லாதவர்களும்