பக்கம் எண் :

116காளித்தம்பியின் கதை

அடைகிறது. என் கடமையைச் செய்வதைப்போலக் களிப்படைகிறேன்.
அதனால் நீ சிரமம் தரவில்லை; நான் மகிழ்ச்சியடைய ஒரு வாய்ப்புத்தான்
தருகிறாய். நான் முதலில் வேலையைக் கவனித்துவிட்டு வருகிறேன். நீ
தூங்கு” என்று கூறிய பழனி, வெளியே சென்றான்.


     காளியின் முதலாளி எந்தெந்த வீட்டுக்கு என்னென்ன பத்திரிகைகள்
கொடுக்க வேண்டுமென்று ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் வீட்டு
முகவரிகளும் இருந்தன. அதைப் பழனி வாங்கிக் கொண்டான்.
பத்திரிகைகளை எடுத்துக் கொண்டான். தன் சைக்கிளில் புறப்பட்டான்.
மடமடவென்று ஒவ்வொரு வீடாகப் பத்திரிகைகளைக் கொடுத்துக்கொண்டே
வந்தான். கடைசியாக இரண்டு வாரப் பத்திரிகைகளையும், ஒரு ஆங்கிலச்
செய்தித்தாளும் இருந்தன. அவதானம் பாப்பையர் சாலையின் மறுகோடியில்
இருந்த வீட்டில் போடவேண்டும். பட்டியலைப் பார்த்தான் பழனி. “அடடா,
இது நம் தலைமையாசிரியர் வீடல்லவா? சரி, அங்கேயும் போட்டுவிட்டுப்
போவோம்” என்று சைக்கிளை மிதித்தான்.


     தலைமை ஆசிரியர் வீடு அவனுக்குத் தெரியும். பள்ளியில் சேருமுன்
ஒருநாள் காளியுடன் போனான். அவ்வளவுதான். அதற்கப்புறம் அந்த
வீட்டிற்குச் சென்றதில்லை. பழனி சைக்கிளை வெளியே நிறுத்தினான்.
பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு தலைமை ஆசிரியரின் வீட்டுக்குள்
நுழைந்தான். வீட்டின் முன் பக்கம் ஓர் அறை இருந்தது. அங்கே தலைமை
ஆசிரியர் இருப்பார் என்று நினைத்தான். அந்த அறையின் முன் நின்றான்.
‘சார்’ என்று அழைக்க நினைத்தான். அதற்குள் வீட்டுக்குள் யாரோ பேசுவது
கேட்டது.


     “சே...சே...ஒரு கணக்குப் போடுவதற்குள் உயிரே போகிறது! சீ, இது ஒரு
பாடமா? இதை வைத்து வாட்டுகிறார்கள். முதல்லே இந்தக் கணக்குப்
புத்தகத்தையும் கணக்கு நோட்டையும் தூக்கியெறிந்தால்தான் திருப்தி வரும்”
என்ற குரல் கேட்டது. மறு நிமிடம் ஒரு புத்தகமும் நோட்டும் பழனியை
நோக்கிப் பறந்து வந்தன. இதைச் சற்றும்