பக்கம் எண் :

சிறுவர் நாவல்117

எதிர்பார்க்காத பழனியின் முகத்தில் இரண்டும் மோதிக் கீழே விழுந்தன.
கனத்த கணக்கு நோட்டு பழனியின் மூக்கைப் பதம் பார்த்ததால் அவன் ‘ஆ’
என்று அலறினான்.


     பழனியின் குரல் கேட்டதும் உள்ளேயிருந்து ஒருசிறுமி எட்டிப்
பார்த்தாள். பழனி மூக்கைத் தடவிக்கொண்டு முகம் சுளிப்பதையும் கீழே
விழுந்துகிடந்த புத்தகங்களையும் பார்த்ததும் அங்கு என்ன நடந்திருக்கும்
என்பதைப் புரிந்து கொண்டாள்.


     “அடடா, புத்தகங்கள் உன்மேல் பட்டுவிட்டனவா? எக்ஸ்க்யூஸ்மீ”
என்று சொன்னாள்.


     “நீதான் இவற்றை வீசியெறிந்தாயா?” என்று கேட்டுக்கொண்டே பழனி
கீழே கிடந்த புத்தகங்களை எடுத்தான்.


     அவள், “ஆமாம்” என்றாள்.


     பழனி எடுத்த புத்தகங்களை, “இந்தா உன் புத்தகங்கள்” என்று
கொடுத்தான்.


     “இதோ பாரு, அந்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்தே, எனக்குக்
கோபமா வரும். அந்தச் சனியனைக் கொண்டுபோய், ஆழமாக ஒரு குழி
தோண்டி அதிலே புதை” என்றாள் அந்தச் சிறுமி.


     பழனிக்குச் சிரிப்பு வந்தது.


     “உனக்கு ஏன் இந்தப் புத்தகங்கள்மேல் இவ்வளவு கோபம்?”


     “பின்னே என்ன, ஒரு கணக்கைப் போட்டால் ஒருவிடை வருகிறது.
புத்தகத்திலே இருக்கிற விடையைப் பார்த்தால் வேறு விடை வருகிறது.
சரின்னு திரும்பப் போட்டால் இன்னொரு விடை வருகிறது. நான் காலையில்
எழுந்து ஆறுதரம் ஒரே கணக்கைப் போட்டேன். ஆறுதரமும் ஆறு விடை
வருகிறது. ஆனால் ஒன்றாவது புத்தகத்துக் கடைசியிலே போட்டிருக்கிறதே,
அந்த விடையோடு ஒத்து வரவில்லை. ஒரு கணக்கே இப்படி உயிரை
எடுத்தால் கோபம்