வராதா? நீ கணக்குப்போட்டால் தெரியும்? நீ படிக்கிற மாணவனா” என்று கேட்டவள், “ஆமாம், நீ யாரு, உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டாள். “நான் பழனி. உங்கள் வீட்டுக்குப் பத்திரிகை போடும் காளியின் நண்பன். இன்றைக்கு அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவனுக்குப் பதில் பத்திரிகைபோட வந்தேன். இதோ பத்திரிகைகள்” என்று பத்திரிகைகளை நீட்டினான் பழனி. கணக்குப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளாத சிறுமி, பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு, “ஓஹோ, நீ தான் மாணவர் தலைவன் பழனியா? வா, வா, உள்ளே வா” என்றாள். பழனி தயங்கித் தயங்கி உள்ளே சென்றான். உள்ளே சோபாக்கள் இருந்தன. அந்தச் சிறுமி, “பழனி, உட்கார், உன்னைப்பற்றி அப்பா அடிக்கடி சொல்வார். நீ மகா கெட்டிக்காரனாமே” என்று கேட்டாள். பழனி உட்கார்ந்தான். அந்தப் பெண் அவளை உண்மையிலேயே புகழ்கிறாளா, அல்லது கிண்டல் செய்கிறாளா என்பதே புரியவில்லை. “நீ தலைமையாசிரியர் மகளா?” என்று கேட்டான் பழனி. “ஆமாம். என் பெயர் திருநிலைநாயகி. திருநிலை, திரு என்று சுருக்கமாகக் கூப்பிடுவார்கள். ஏழவாது படிக்கிறேன்.” பழனியின் கையில் இன்னமும் திருநிலை எறிந்த கணக்குப் புத்தகமும், கணக்கு நோட்டும் இருந்தன. பழனி, அவற்றை மீண்டும் அவளிடம் நீட்டினான். “இதோபார், அந்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்தால் எனக்குக் கோபம்தான் வரும். ஆமாம், அப்புறம் உன்னோடு பேசக்கூட மாட்டேன்” என்றாள் திருநிலை. |