“அப்பா அப்பா, பழனி மிக நன்றாகச் சொல்லித் தருகிறான். தினமும் கொஞ்ச நேரம் பழனி எனக்குச் சொல்லிக்கொடுத்தால் நான் கணக்கில் கெட்டிக்காரி ஆகிவிடுவேன்” என்று சொன்னாள். “சரி, திரு.பழனியையே உனக்கு டீயூஷன் வாத்தியாராக நியமிக்கிறேன்” என்றார் தியாகராஜர் திருநிலை பெருமகிழ்ச்சியடைந்தாள். அன்று பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனியை அழைத்தார். “பழனி, திருநிலைக்குக் கணக்கு என்றால் விளக்கெண்ணெய்தான். அவளுக்கே நீ கணக்கு கற்றுக் கொடுத்துவிட்டாயே. சபாஷ்! உம்...நாளையிலிருந்து தினமும் ஒருமணிநேரம் திருநிலைக்கு டியூஷன் சொல்லிக்கொடு” என்று சொன்னார். ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஏழாம் வகுப்புக்கு டியூஷன் சொல்லித் தருவதா? பழனி தயங்கினான். “என்ன யோசிக்கிறாய்? உன்னால் நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். நாளையிலிருந்து வருகிறாயா?” என்று கேட்டார். பழனி, ‘சரி’ என்று சம்மதித்தான். காளியின் காய்ச்சல் இரண்டே நாளில் குணமடைந்தது. பழனி காலையில் சைக்கிள் துடைப்பதை விட்டு விட்டான். திருநிலைக்கு காலை நேரத்தில் மட்டும் டியூஷன் சொல்லிக் கொடுத்தான். தலைமை ஆசிரியர் அவனுக்கு முதல் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் கொடுத்தார். பழனி அதை முதலில் மறுத்தான். தலைமை ஆசிரியர் விடவில்லை. ‘உன் உழைப்புக்கு இது ஊதியம். பெற்றுக்கொள். உன்னால் திருநிலை கணக்கிலும் நல்ல மார்க் வாங்கத் தொடங்கி விட்டாள். அதற்கு ஐம்பது ரூபாய் என்ன, இன்னும் அதிகமாகவே கொடுக்கலாம்” என்றார். பழனி பணத்தைப் பெற்றுக்கொண்டான். நாட்கள் பறந்தன! மல்லிகை இதழில் இப்போதெல்லாம் அடிக்கடி பழனியின் கதைகளும் பாடல்களும் இடம்பெற்றன. நவம்பரில் |