11 சுந்தரேசர் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் பெயர் சங்கரலிங்கம், அவர்தான் அந்தப் பள்ளியின் என்.சி.சி. ஆபீஸர். டிசம்பர் விடுமுறையில் என்.சி.சி. ஆபீஸர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று சென்னையில் நடந்தது. சங்கரலிங்கம் அதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். முகாம் முடியும்போது, மாமல்லபுரத்திற்கு உல்லாசப் பயணம் ஒன்றை ஏற்படுத்தினர். அந்த உல்லாசப் பயணக் குழுவினருடன்தான் சங்கரலிங்கமும் மாமல்லபுரத்திற்கு வந்தார். எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு இறுதியாகக் கடற்கரைக் கோவிலுக்கு வந்தார். கோவிலைப் பார்த்துவிட்டு கோவிலின் கடலைப் பார்த்த வாயில் வழியாக இறங்கினார். அவருடன் வேறு சிலரும் இருந்தனர். சங்கரலிங்கம், கரையில் ‘ஓ’ எனும் பேரொலியுடன் மோதிச் சிதறும் அலைகளின் அழகையும் ஆவேசத்தையும் கண்டு ரசித்தவராகக் கரையை நெருங்கினார். கரையை ஒட்டிய பாறையின்மீது அமர்ந்திருந்த இரு சிறுவர்களைத் தற்செயலாகப் பார்த்தார். அவர் வியப்படைந்தார். சிறுவர்கள் |