பக்கம் எண் :

சிறுவர் நாவல்125

இருவரில் ஒருவன் பழனியைப்போல் இருந்தான். சங்கரலிங்கம் மீண்டும்
அவனைப் பார்த்தார். ஆம்! அவன் பழனியே தான்! சுந்தரேசரின் ஒரேமகன்
- ஒப்புயர்வற்ற மாணவ மாணிக்கம் பழனியேதான். சங்கரலிங்கம் பழனியை
நோக்கி நடந்தார்.


     தலைமை ஆசிரியர் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து விட்டான்.
உடனே எழுந்தான். “காளி கொஞ்சம் இரு. இதோ வருகிறேன்” என்று
கூறிவிட்டுத் தன்னை நோக்கி வரும் தலைமை ஆசிரியரை அணுகிக்
கைகூப்பி வணங்கினான். தலைமை ஆசிரியர், வியப்புத் தாளாமல், “பழனியா?
நான் பார்ப்பது பழனியைத்தானா?” என்று பதறிக் கேட்டார்.


     சங்கரலிங்கம் அப்படிப் கேட்டதற்குக் காரணம், பழனியின் தற்போதைய
தோற்றம்தான். தந்தமும் தங்கமும் கலந்து செய்ததைப்போன்ற அழகான உடல்
சற்றுக் கறுத்திருந்தது. வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்ற வலிமை பெற்ற உடல்
மெலிந்திருந்தது. அறிவு ஒளிவீசும் கண்கள் சற்றே உள்நோக்கிச்
சென்றிருந்தன. விலை உயர்ந்த டெரிகாட் சட்டைக்குப் பதில் முரட்டுத்
துணியாலான சட்டைப் போட்டுக் கொண்டிருந்தான். கையிலே வாட்ச் இல்லை.
விரலிலே மோதிரமும் இல்லை. கழுத்திலே மெல்லிய தங்கச் சரடு இல்லை.
காலிலே பளபளவென்று மின்னும் பூட்ஸ் இல்லை.


     இப்படிப்பட்ட கோலத்திலே பழனியைப் பார்த்ததாக அரிச்சந்திரனே
வந்து சத்தியம் செய்து சொல்லியிருந்தாலும் அவர் நம்பியிருக்க மாட்டார்.
பழனியின் டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட் கேட்ட சுந்தரேசர், பழனி கோவையில்
தன் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போகிறான் என்று மட்டுமே
சொன்னார். மற்ற விவரங்கள் அவருக்குத் தெரியாது. எதிர்பாராத நேரத்தில்
எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத தோற்றத்தில் பழனியைக் கண்ட அவர்
திகைத்தார். வியந்தார். கண் கலங்கினார்.


     பழனி ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அதற்குப்
பதிலாக, “சார் உங்களுக்கு லட்சியத்தில் நம்பிக்கை உண்டா? ஒருவன் தன்
குறிக்கோளை எப்பாடு பட்டாவது