பக்கம் எண் :

சிறுவர் நாவல்129

     “அப்படியானால் என்னுடன் வா” என்றான் பழனி. செல்வமணி ஒன்றும்
புரியாமல் பழனியுடன் சென்றான்.


     பள்ளி அருகே ஒரு தேநீர்க்கடை இருந்தது. பழனி செல்வமணியை
அங்கே அழைத்துச் சென்றபோது தான் செல்வமணிக்கு விஷயம் புரிந்தது.
அவன் சாப்பிடவில்லை என்பதற்காக அவனுக்குச் சிற்றுண்டி வாங்கித்தர
அழைத்து வந்துள்ளான். இதைப் புரிந்து கொண்ட செல்வமணி கடைக்குள்
நுழையாமல் வெளியே நின்றான்.


     “செல்வமணி, ஏன் நின்றுவிட்டாய்? எனக்காக ஒரு வேலை செய்வதாக
இப்போதுதானே சொன்னாய்? நான் ஒன்றும் பெரிய வேலை தரவில்லை.
கொஞ்சம் உன் வயிற்றை நிரப்பிக்கொள். அதுதான் எனக்காக நீ
செய்யவேண்டிய வேலை” என்றான் பழனி.


     செல்வமணி எத்தனை மறுத்தும் பயனில்லை. பழனியின்
வேண்டுகோளுக்கு இணங்குவது தவிர வேறு வழியில்லை. அதனால் பழனி
அன்போடு வாங்கித்தந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டான்.


     செல்வமணியின் வீடு பள்ளியிலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலிருந்த
குசப்பேட்டையில் இருந்தது. அங்கே ஒரு சின்னக் குடிசையில் செல்வமணி
வசித்தான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா வீட்டு வேலை செய்து
மகனைக் காப்பாற்றி வந்தாள். வீட்டு வேலை முடித்தபிறகுதான் சமைப்பாள்.
பகல் சாப்பாட்டுக்கே செல்வமணி மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து போய்
நடந்து வர முடியாது. இரவில் ஏதாவாது சாதம் மீதியானால் அதைக்
கட்டிக்கொண்டு வருவான். இல்லையானால் அம்மா தரும் கால் ரூபாய், அரை
ரூபாய்க்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடுவான். அன்று அந்தக் காசும் இல்லை.
அதனால் செல்வமணி சாப்பிட முடியவில்லை.


     இதையெல்லாம் செல்வமணியிடமிருந்து பழனி தெரிந்து கொண்டான்.
எப்படிப்பட்ட வறுமை! “கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும்
கொடிது இளமையில் வறுமை”