அழகனும் பழனியும் கோவிலை விட்டு வெளியே வந்தனர். வீடு நோக்கி நடந்தனர். வழியில் பழனி ஏதோ யோசித்தான். பிறகு, “அழகா, நான் என் தந்தையால் புகழ் பெறுவதாக நாகன் கூறி வருகிறான். அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். “பழனி, ரேடியம் இருட்டிலும் ஒளிவிடுமாம். அதன் பக்கத்திலே ஒரு சிறு விளக்கு இருந்துவிட்டால், ரேடியத்தின் ஒளியே விளக்கிலிருந்து பெற்றது தான் என்று கூறமுடியுமா? அப்படிச் சொல்பவர்கள் ரேடியத்தின் தன்மையினை அறியாதவர்கள். பழனி, நீ ஒரு ரேடியம். இருளிலும் ஒளிவிடும் ஒப்பற்ற ரேடியம். உன்னைப்போலத் தன்னால் இருக்க முடியவில்லையே என்ற பொறாமையால் நாகமாணிக்கம் பொய் கூறிவருகிறான். அதை நினைத்து வருந்தாதே” என்று சொன்னான் அழகன். பழனியின் மனம் திருப்தி அடையவில்லை. “அழகா, நீ சொல்வதை என்னால் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்றான். அழகன் சிரித்தான். “அப்படியானால், நாகன் சொல்வதைத்தான் நீ ஏற்றுக்கொள்கிறாயா? உனக்கென்று எந்தத் திறமையும் கிடையாது என்று எண்ணுகிறாயா? உன் புகழெல்லாம் உன் அப்பாவால் வந்த புகழென்றே நீயும் முடிவு செய்துவிட்டாயா? என்று கேட்டான். “அழகா, என் அப்பாவின் பொருளும் புகழும் ஓரளவு எனக்குப் புகழைத் தருகின்றன. என்னை யாரிடமாவது அறிமுகப்படுத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவன்தான் பழனி; படிப்பில் புலி; சொற்பொழிவாற்றுவதில் சிங்கம்; விளையாட்டில் வேங்கை என்றா சொல்கிறார்கள்? முதலில் இவன் சுந்தரேசர் மகன் என்று சொல்கிறார்கள். பிறகு படிப்பைப் பற்றி ஏதோ சொல்கிறார்கள். கேட்பவர்களின் காதுகளில் என் சொந்தத் திறமையைப் பற்றிச் சொன்ன சொற்கள் விழுந்ததாகத் தெரிவதில்லை. அவர்கள், ‘ஓ, நீ பாசுவின் மகனா?’ என்று வாயைப் பிளக்கிறார்கள். உடனே எனக்கு ராஜோபசாரம் நடக்கிறது. இதை எத்தனை முறை நான் |