பக்கம் எண் :

132காளித்தம்பியின் கதை

நான்கைந்து தெருக்களைக் கடந்ததும் ஒரு சந்து. அதில் நுழைந்து சென்றான்.
சந்தின் மூலையில் ஒரு சைக்கிள் இருப்பதைப் பார்த்தான். “கடவுளே அது
என் சைக்கிளாக இருக்கக்கூடாதா?” என்று நினைத்துக்கொண்டே அதன்
அருகே ஓடினான். அது அவன் சைக்கிள்தான். சைக்கிளின் பின்னே பேப்பர்
கட்டு அப்படியே இருந்தது. சைக்கிளில் மாட்டியிருந்த பையும் அப்படியே
இருந்தது. பழனி சற்றுமுற்றும் பார்த்தான். அந்தச் சந்தில் யாருமில்லை.
கடைமுன் விட்ட சைக்கிளை இங்கே கொண்டுவந்துவிட்ட திருடன் யார்?
திருடன் என்றால் சைக்கிளை இங்கேயே ஏன் விட்டுவிட்டுப் போகவேண்டும்?
பேப்பர், பை முதலிய யாவும் வைத்தபடியே இருக்கின்றனவே?


     பழனிக்கு இப்படியே சிந்தித்துக்கொண்டு நிற்கவோ, துப்பறியும் வேலை
செய்து திருடனைக் கண்டுபிடிக்கவோ நேரமில்லை. இன்னும் இருக்கும்
கடைகளுக்குப் பேப்பர் போட வேண்டாமா? “திருடியவன் யாராக
வேண்டுமானாலும் இருக்கட்டும், சைக்கிளை இங்கே விட்டுவிட்டுப்
போனானே, அதுவரையில் அவனுக்கு நன்றி” என்று சொல்லிவிட்டுத் தன்
சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான் பழனி.


     மறுநாள் செல்வமணி வந்தான். சைக்கிளை அவனிடம் கொடுத்தான்
பழனி. ஞாபகமாக, “செல்வமணி சைக்கிளை நிறுத்தும்போது, அதைப்
பூட்டிவை” என்று சொல்லி அனுப்பினான்.


     திங்கட்கிழமையன்றுதான் பழனிக்கு யார் சைக்கிளை எடுத்துச் சென்றது
என்பது தெரியும். மாணவர் தலைவன் தேர்தலில் தோற்ற நாவுக்கரசு சூளை
அஷ்டபுஜம் சாலையில் இருப்பவன். அவன் வெள்ளிக்கிழமை மாலை பேப்பர்
கடையில் சைக்கிளைப் பார்த்தான். அவனுக்குப் பழனியைப் பிடிக்காது. அவன்
துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்க சைக்கிளை அங்கிருந்து எடுததுச்சென்று
வேறு சந்தில் விட்டுவிட்டான். இதைப் பெரிய வீரச்செயலைப் போலத் தன்
நண்பன் ஒருவனிடம் வர்ணித்துக் கொண்டிருந்ததைச் செல்வமணி கேட்டு
விட்டான். அவன் உடனே அதைப் பழனியிடம் சொல்லவில்லை. நேரே
தலைமையாசிரியரிடம்