தள்ளிவிடவில்லை. இரண்டு போலீஸ்காரர்களை அந்த முகவரிக்குப் போய்ப் பார்க்குமாறும், பழனி என்ற பெயரோடு மதுரையிலிருந்து வந்தச் சிறுவன் இருந்தால் அவனை ஸ்டேஷனுக்கு அழைத்து வருமாறும் கூறி அனுப்பினார். அந்தப் போலீஸ்காரர்கள்தான் பழனியை அழைத்துச் சென்றனர். பழனி ஸ்டேஷனுக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் அங்கே இல்லை. அவர் வீட்டுக்குப் போயிருந்தார். ஹெட்கான்ஸ்டபிள் பழனியை விசாரித்தார். “உன் பெயர் என்ன?” “பழனி” “எந்த ஊர்?” “மதுரை” “மதுரையிலிருந்து இந்த ஊருக்கு எப்போது வந்தாய்?” “சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு” “சரி, உன் பெயர் என்ன?” “பழனி” “இங்கே வைத்துக்கொண்ட பெயர் பழனி. அது தெரிகிறது. மதுரையில் உன் பெயர் என்ன?” “பழனி” “டேய் ரங்கா, யாரிடம் வேஷம் போடுகிறாய்?” என்று ஓர் அதட்டு அதட்டிவிட்டு தன் பெரிய கண்களால் அவனை நெருங்கிப் பார்த்துக் கேட்டார் அவர். “உன் பெயர் ரங்கன்தானே?” “இல்லை”. “மதுரையில் நீ வேலை செய்த இடத்தில் ஏராளமான நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிவரவில்லை.........” |