“நல்லது. நேரமாகிறது. சென்று வா. தேர்வு நன்றாக எழுது; சிறந்த வெற்றி உனக்குக் கிடைக்கும்” என்று வாழ்த்தினார் இன்ஸ்பெக்டர். பழனி பறந்து சென்று ஜீப்பில் ஏறினான். ஜீப் திருவொற்றீஸ்வரர் பள்ளியின் முன் நின்றது. பழனி அதிலிருந்து இறங்கினான். ஹெட்கான்ஸ்டபிளிடம் ‘நன்றி’ என்று கூறிவிட்டுப் பள்ளிக்குள் சென்றான். அவன் வகுப்பறைக்குள் நுழைந்ததைப் பார்த்தபின்பே ஹெட்கான்ஸ்டபிள் ஜீப்பில் திரும்பிச் சென்றார். மணி பத்தேகால்! பழனி அப்போதுதான் தேர்வு நடக்கும் அறைக்குள் நுழைந்தான். இன்னும் கால்மணி நேரம் கழித்து வந்திருந்தால் அவனைத் தேர்வு எழுத அனுமதித்திருக்க மாட்டார்கள். பழனியைக் கண்ட ஆசிரியரின் முகம் மலர்ந்தது. “பழனி வந்துவிட்டாயா? உம், சீக்கிரம் உட்கார். தேர்வு எழுது” என்று கூறிக்கொண்டே வினாத்தாளை அவனிடம் கொடுத்தார். அது இலவச உயர்நிலைப்பள்ளி. அதனால் தேர்வுக்குரிய விடைத்தாளை மாணவர்களே கொண்டு வரவேண்டும் பழனி நல்ல வெள்ளைத்தாளை வாங்கி வீட்டில் வைத்திருந்தான். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்ததனால் அவனிடம் தாளும் இல்லை; பேனாவும் இல்லை. ஆசிரியரிடம் பழனி தன் நிலைமையை விளக்கினான். “சார் எதிர்பாராதவிதமாக ஏதேதோ நடந்து விட்டதுசார். நான் பேனாவும் கொண்டுவரவில்லை. பேப்பரும் கொண்டுவரவில்லை” என்றான். அவனைப் பார்த்தபோதே - அவன் நேரம் கழித்துத் தேர்வுக்கு வந்தபோதே ஏதோ எதிர்பாராத நிகழ்ச்சி நடந்திருக்கும் என்று யூகித்திருந்தார் ஆசிரியர். பழனியே அதைச் சொல்லிவிட்டான். உடனே ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, “மாணவர்களே, நம் பழனி தேர்வுக்குப் |