பேப்பர் கொண்டு வரவில்லை. அதிகமாக யாராவது கொண்டு வந்திருந்தால் கொடுங்கள்” என்றார். உடனே பலர் எழுந்து தாள் கொடுத்தார்கள். ஆசிரியர் அவற்றை வாங்கினார். தேவையான அளவு பழனியிடம் கொடுத்தார். மற்றவற்றைக் கொடுத்த மாணவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். பிறகு தன்னுடைய பேனாவைப் பழனியிடம் கொடுத்தார். பழனி நன்றியுடன் அதைப் பெற்றுக் கொண்டான். மதுரை மீனாட்சியை மனத்தில் நினைத்தான். வணங்கினான். பிறகு வினாத்தாளைப் படித்தான். வேகமாக எழுதினான். விடைகள் பேனாவுக்குள் ஒளிந்து கொண்டிருந்ததைப்போல ஓடிவந்து விழுந்தன! இத்தனைக்கும் பழனி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. பசியைச் சற்றும் பொருட்ப்படுத்தாது விடையை எழுதினான். கடைசிமணி அடிக்கச் சில நிமிடங்களுக்கு முன்பே பழனி விடை எழுதி முடித்துவிட்டான். விடைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். பள்ளி ப்யூன் அவனிடம் வந்தான். “பழனி, தலைமை ஆசிரியர் உன்னை அழைத்துவரச் சொன்னார்” என்று சொன்னான். பழனி தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றான். தலைமையாசிரியருடன் அறையில் வேறு ஒருவர் இருப்பதையும் பார்த்தான். அவர் யார் தெரியுமா? காலையில் அவன் கண்ட இன்ஸ்பெக்டர். “ஒருவேளை நாம் திரும்பிவராமல ஓடிப்போய் விடுவோமோ என்று சந்தேகப்பட்டு அவரே இங்கு வந்து விட்டார் போலிருக்கிறது” என்று நினைத்தான் பழனி. தலைமை ஆசிரியர் முன்னே பழனி நின்றான். “பழனி காலையில் நடந்த செய்திகளை இன்ஸ்பெக்டர் கூறினார். இப்போது அவர் எதற்காக வந்திருக்கிறார் தெரியுமா?” |